முதியோர் உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்


முதியோர் உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 2 April 2021 12:14 AM IST (Updated: 2 April 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

முதியோர் உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

நாமக்கல்:
வேலகவுண்டம்பட்டி அருகே மானத்தியில் முதியோர் உதவித்தொகை வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கிராம நிர்வாக அலுவலர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் குழந்தைவேல். இவருடைய மனைவி வசந்தி (வயது 41). இவர் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இதனிடையே மானத்தியை சேர்ந்த சுகுமாரன் (72) என்பவர் முதியோர் உதவித்தொகை கேட்டு கிராம நிர்வாக அலுவலர் வசந்தியிடம் விண்ணப்பித்து இருந்தார். முதியோர் உதவித்தொகை வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறு வசந்தி, சுகுமாரனிடம் கேட்டு உள்ளார்.
இதுகுறித்து சுகுமாரன் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி சுகுமாரன், ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகளை வசந்தியிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வசந்தியை கைது செய்தனர்.
பணியிடை நீக்கம்
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வசந்தியை படையிடை நீக்கம் செய்ய திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜிடம் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்தனர். அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் வசந்தியை பணியிடை நீக்கம் செய்து உதவி கலெக்டர் மணிராஜ் உத்தரவிட்டார்.
===========

Related Tags :
Next Story