மேற்கு மண்டலத்தில் துணை ராணுவத்தினர் உள்பட 31 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்று புதிய போலீஸ் ஐ.ஜி. அமல்ராஜ் கூறினார்


மேற்கு மண்டலத்தில் துணை ராணுவத்தினர் உள்பட 31 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்று புதிய போலீஸ் ஐ.ஜி. அமல்ராஜ் கூறினார்
x
தினத்தந்தி 2 April 2021 12:34 AM IST (Updated: 2 April 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு மண்டலத்தில் துணை ராணுவத்தினர் உள்பட 31 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்று புதிய போலீஸ் ஐ.ஜி. அமல்ராஜ் கூறினார்.

கோவை,

மேற்கு மண்டல ஐ.ஜி.யாக பணிபுரிந்தவர் தினகரன். இவரை தேர்தல் ஆணையம் நேற்று திடீர் இடமாற்றம் செய்தது. இதையடுத்து  மேற்கு மண்டல புதிய போலீஸ் ஐ.ஜி.யாக அமல்ராஜ் நியமிக்கப்பட் டார். 

இவர் நேற்று பகல் 3 மணிக்கு கோவை ரேஸ்கோர்சில் உள்ள மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்துக்கு வந்து பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக அவர், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்,  அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் ஐ.ஜி. அமல்ராஜ்  நிருபர்களிடம் கூறியதாவது 

பாதுகாப்புக்கு 31 ஆயிரம் பேர்

நான் ஏற்கனவே கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி உள்ளேன். தற்போது மேற்கு மண்டல ஐ.ஜி.யாக பொறுப்பேற்கிறேன். 8 மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் மொத்தம் 18 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. 

இங்கு  தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 17 ஆயிரம் போலீசார், 4 ஆயிரம் துணை ராணுவத்தினர் (சி.ஐ.எஸ்.எப்., பி.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்.) மற்றும் ஊர்க்காவல் படை, முன்னாள் காவல் துறையினர், முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ். உள்பட 10 ஆயிரம் பேர் என மொத்தம் 31 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
கடும் நடவடிக்கை

தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறுபவர்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள். மக்கள் எந்தவித அச்சமும் இன்றி, அமைதியான முறையில் வாக்களிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அமல்ராஜ், சிறந்த சேவைக்காக ஜனாதிபதி விருது, முதல் - அமைச்சர் விருது உள்பட 3 உயர் விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story