மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 2 April 2021 1:12 AM IST (Updated: 2 April 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணியை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி ஆய்வு செய்தார்.

அண்ணாமலைநகர், 

தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலை சிறப்பாக நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே இருப்பதால் அந்தந்த தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி  சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த நகராட்சி அலுவலக கூட்ட அரங்கு அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
 பின்னர் அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. இந்த பணியை மண்டல  தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டனர். 

ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியை கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர்சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், வேட்பாளர்களின் சின்னம், பெயரை சரியான முறையில்  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்த வேண்டும். இதில் தவறு ஏதும் நடைபெறக்கூடாது என வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது சிதம்பரம் சப்-கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மதுபாலன், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தமிழ்ச்செல்வன், தாசில்தார் ஆனந்த், நகராட்சி ஆணையாளர் அஜிதாபேகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story