திருப்பூரில் 101 டிகிரி பதிவு
திருப்பூரில் 101 டிகிரி பதிவு
திருப்பூர்,
திருப்பூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வந்து கொண்டிருக்கிறது. தினமும் 90 டிகிரி முதல் 95 டிகிரி வரை இருந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்து கொண்டிருக்கிறார்கள். வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையிலும், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் குளிர்பானங்களை வாங்கி பருகி வருகிறார்கள்.
நுங்கு, இளநீர், பதநீர், தர்பூசணி, முலாம்பழம், சர்பத், மோர் போன்றவைகளை பலரும் சாலையோர கடைகளில் வாங்கி பருகி வருகிறார்கள். இதன் விற்பனையும் மாநகர் பகுதிகளில் அதிகரித்து வருகிறது. சாலையோர கடைகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது. திருப்பூரில் நேற்று முன்தினம் 102 டிகிரி வெயில் பதிவானது. நேற்று 101 டிகிரி வெயில் பதிவானது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story