வாசுதேவநல்லூரில் வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் பலி


வாசுதேவநல்லூரில்  வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் பலி
x
தினத்தந்தி 2 April 2021 1:35 AM IST (Updated: 2 April 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூரில் வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் பலியானார்.

வாசுதேவநல்லூர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி விநாயகர் காலனியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் தனசூர்யா (வயது 20). ஆட்டோ டிரைவர். சிவகாசியைச் சேர்ந்த திருமலைக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வாசுதேவநல்லூரில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோவிலுக்கு தனசூரியா ஆட்டோவில் வந்துள்ளார். 

இரவு சாமபூசைக்குப் பின்னர் தனசூரியா கோவில் முன் ஆட்டோவை நிறுத்தி விட்டு சாலையோரம் படுத்து தூங்கியுள்ளார். 

நள்ளிரவு நேரத்தில் அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் தனசூர்யா மீது மோதிவிட்டு சென்றுள்ளது. இதில் தலை நசுங்கி அதே இடத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்கு பதிவு செய்து தனசூர்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விபத்து ஏற்படுத்தி வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story