சின்னம் பொருத்தும் பணி


சின்னம் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 2 April 2021 1:42 AM IST (Updated: 2 April 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடந்தது

திருமங்கலம், 
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து தொகுதிக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் முக்கிய அரசியல் கட்சியினர் உள்ளிட்ட 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நோட்டாவையும் சேர்த்து 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் சின்னம் பொருத்தும் பணி நடந்து வருகிறது.தாலுகா அலுவலகத்தில் வருவாய், ஊரக வளர்ச்சி மேலாண்மை, பொதுப்பணித்துறை, நெடுஞ் சாலைத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் ஈடுபட்டனர். அரசு அலுவலர்கள் சின்னங்களை வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணிகளில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அதிகாரி சவுந்தர்யா, உதவி தேர்தல் அதிகாரி முத்துப்பாண்டி தலைமையில் இந்த பணிகள் நடைபெற்றது.

Next Story