விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரம்


விருத்தாசலம் தொகுதியில்  விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 2 April 2021 1:44 AM IST (Updated: 2 April 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் தொகுதியில் பிரமலதா விஜயகாந்தை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.

விருத்தாசலம், 
தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதையடுத்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்து கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க.பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை ஆதரித்து விஜயகாந்த் இன்று (வெள்ளிக்கிழமை ) தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார். 
அதன்படி  மாலை 6 மணிக்கு வேப்பூர், 7 மணிக்கு மங்கலம்பேட்டை, 8 மணிக்கு விருத்தாசலம் பாலக்கரை ஆகிய 3 இடங்களில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்து முரசு சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கிறார். இதில் பொதுமக்கள், கூட்டணி கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இந்த தகவலை விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. தேர்தல் பணிக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


Next Story