குமரலிங்கம் பகுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குமரலிங்கம் பகுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 2 April 2021 1:52 AM IST (Updated: 2 April 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

குமரலிங்கம் பகுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

போடிப்பட்டி
குமரலிங்கம் பகுதியில் ஆனைமலை சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர்க்குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினசரி லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இவ்வாறு குடிநீர்க்குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மேடான பகுதிகளுக்கு குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படுகிறது. இதேநிலை நீடித்தால் கோடையில் குடிநீர்த் தட்டுப்பாடும் குடிநீருக்கான போராட்டங்களும் உறுதியாக நடக்கும் வாய்ப்பு உள்ளது.எனவே குமரலிங்கம் பகுதியிலுள்ள அனைத்து வீதிகளிலும் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து உடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களைக் கண்டறிந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அடிக்கடி குடிநீர்க் குழாய் உடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து மீண்டும் உடைப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒவ்வொரு துளி குடிநீரும் மிகவும் முக்கியமானது என்ற நிலையில், பல பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வரும் சூழலில், இங்கு வீணாக சாக்கடையில் கலப்பது வேதனையளிப்பதாக உள்ளது என்று அப்பகுதி பொதுமக்கள் கூறினர். 

Next Story