சேவூர் அருகே தி.மு.க.பிரசார வாகன விளம்பர பேனர் கிழிப்பு
சேவூர் அருகே தி.மு.க.பிரசார வாகன விளம்பர பேனர் கிழிப்பு
சேவூர்,
அவினாசி சட்டமன்றத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் போட்டியிடுகிறார். இதையடுத்து, சேவூர் அருகே புஞ்சைத்தாமரைக்குளம் ஊராட்சி பகுதியில், வேட்பாளர் பிரசார வாகனம் நேற்று இரவு சென்றது. அப்போது, மர்ம ஆசாமிகள் சிலர் பிரசார வாகனத்தை தடுத்து நிறுத்தி ஒலி பெருக்கியினை அணைக்கச்சொல்லியும், வாகனத்தின் சாவியையும் பிடுங்கியும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் வாகன ஓட்டுனர், ஒலி பெருக்கியை அணைத்துள்ளார்.
இதையடுத்து வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த விளம்பர பேனரை கிழித்து தகராறு செய்துள்ளனர். இதனால் புஞ்சைத் தாமரைக்குளம் பகுதியில் தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story