பெருந்துறையில் தூக்குப்போட்டு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை தேர்வில் தேர்ச்சி பெறாததால் விபரீத முடிவு
தேர்வில் தேர்ச்சி பெறாததால் பெருந்துறையில் தூக்குப்போட்டு மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
தேர்வில் தேர்ச்சி பெறாததால் பெருந்துறையில் தூக்குப்போட்டு மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பல் மருத்துவ மாணவர்
பெருந்துறை வள்ளலார் வீதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 53). இவருடைய மனைவி தையல்நாயகி (49). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் தேவநாதன் (23).
இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் அவர் தேர்ச்சி அடையவில்லை என கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதன்காரணமாக தேவநாதன் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு தூங்க செல்வதாக கூறிவிட்டு படுக்ைக அறைக்கு அவர் சென்று உள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் தேவநாதன் எழுந்திருக்காததால் அறையின் கதவை அவருடைய தாய் தையல்நாயகி தட்டி உள்ளார். ஆனால் அறைக்குள் இருந்து எந்தவித பதிலும் வராததால் தையல்நாயகி சந்தேகம் அடைந்து, அறையின் பின்புற ஜன்னலை திறந்து பார்த்தார். அப்போது தேவநாதன் சேலையால்் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் தையல்நாயகி கதறி அழுதார்.
விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் லூதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தேவநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story