திருச்சியில் ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா


திருச்சியில் ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 April 2021 2:46 AM IST (Updated: 2 April 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

திருச்சி
திருச்சி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 15,684 ஆக உயர்ந்தது. 384 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதேநேரம் நேற்று 16 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அந்தவகையில் இதுவரை 15,115 பேர் பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக உள்ளது.



Next Story