பொங்கலூர் அருகே ரூ5 கோடி மதிப்பிலான காற்றாலை தீப்பிடித்து எரிந்து சேதமானது காற்றாலை


பொங்கலூர் அருகே ரூ5 கோடி மதிப்பிலான காற்றாலை தீப்பிடித்து எரிந்து சேதமானது காற்றாலை
x
தினத்தந்தி 2 April 2021 2:47 AM IST (Updated: 2 April 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே ரூ 5 கோடி மதிப்பிலான காற்றாலை தீப்பிடித்து எரிந்து சேதமானது

பொங்கலூர், ஏப்.2-
பொங்கலூர் அருகே ரூ. 5 கோடி மதிப்பிலான காற்றாலை தீப்பிடித்து எரிந்து சேதமானது.
காற்றாலை
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காற்றாலைகள் ரூ.ஒரு கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மதிப்பு கொண்டதாகும். இந்த காற்றாலைகளை தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ளன. 
இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அரசுக்கு கொடுக்கப்பட்டு, பல்வேறு பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனங்கள் அரசிடம் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்கிறது. இந்த நிலையில் நேற்று மாலையில் இந்தப் பகுதியில் பலத்த காற்று வீசியது. 
தீப்பிடித்து எரிந்தது
இதனால் பொங்கலூரை அடுத்த கள்ளக்கிணறு என்ற இடத்தில் தனியார் நிறுவனத்தால் காற்றாலை அமைக்கப்பட்டிருந்த காற்றாலை சராசரி வேகத்தை விட அதிக வேகத்தில் சுழன்றது. இந்த நிலையில் திடீரென காற்றாலையில் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. 
இதனால் அந்த காற்றாலையின் மேல்பகுதி கரும் புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீப்பிடித்து எரிந்த காற்றாலையின் மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது.  

Next Story