ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி; வாலிபர் கைது


ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி; வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 April 2021 5:40 AM IST (Updated: 2 April 2021 5:40 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் கைது

தலைவாசல்:
தலைவாசல் அருகே பட்டு துறை ரோடு மற்றும் மும்முடி பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற தலைவாசல் போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.  விசாரணையில் அவர் தலைவாசல் அருகே சதாசிவபுரம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 30) என்பதும், அவர் தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story