கிடப்பிலுள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்ற பாடுபடுவேன் அ.தி.மு.க. வேட்பாளர் ரவிமனோகரன் உறுதி


கிடப்பிலுள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்ற பாடுபடுவேன் அ.தி.மு.க. வேட்பாளர் ரவிமனோகரன் உறுதி
x
தினத்தந்தி 2 April 2021 11:01 AM IST (Updated: 2 April 2021 11:01 AM IST)
t-max-icont-min-icon

ஆன்மிக நகரான பழனியில் கிடப்பிலுள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்ற பாடுபடுவேன் அ.தி.மு.க. வேட்பாளர் ரவிமனோகரன் உறுதி.

பழனி, 

பழனி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ரவிமனோகரன் போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களாக தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை மற்றும் பழனி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

நேற்று பழனி நகர், நெய்க்காரப்பட்டி, பெரியகலையம்புத்தூர், எல்லமநாயக்கன்புதூர், வேலூர், கரடிக்கூட்டம், கிருஷ்ணாபுரம், தாதநாயக்கன்பட்டி, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம்புதூர், சித்தரேவு, லட்சுமாபுரம், நரிப்பாறை, குதிரையாறு அணை, பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். 

முன்னதாக அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள், கட்சியினர் அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில் பொதுமக்களிடையே ரவிமனோகரன் பேசியதாவது:- பழனியே எனது பூர்விகம். ஆகையால் பழனியில் உள்ள ஒவ்வொரு நிகழ்வுகளையும் அறிந்துள்ளேன். எனவே மக்களுக்கு தற்போதைய தேவைகள் என்ன, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை அறிந்துள்ளேன். ஆகவே அதை அறிந்து அதற்கென திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவேன்.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம்படைவீடு பழனியில் உள்ளது. பழனியை சுற்றிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன. இதனால் பழனியை ஆன்மிக நகராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு திட்டம் மூலம் பழனியை திருப்பதி போல் மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். தற்போது பழனி நகரத்தில் பல திட்டங்கள் கிடப்பில் உள்ளன. அவ்வாறு கிடப்பில் உள்ள அனைத்து மக்களுக்கான திட்டங்களையும் முறையாக செயல்படுத்த பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார். 

பிரசாரத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Next Story