கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் பிரசாரம்: தி.மு.க.விற்கு போடும் ஓட்டு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேச்சு


கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் பிரசாரம்: தி.மு.க.விற்கு  போடும்  ஓட்டு  வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 2 April 2021 5:38 AM (Updated: 2 April 2021 5:38 AM)
t-max-icont-min-icon

தி.மு.க.விற்கு போடும் ஓட்டு தமிழக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கொடைக்கானல் கீழ்மலை பகுதி பிரசாரத்தில் தி.மு.க. வேட்பாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசினார்.

பழனி, 

பழனி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். நேற்று அவர் கொடைக்கானல் கீழ்மலை கிராம பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடம் அவர் பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. அரசின் அவல நிலைகளும், மக்கள் நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக கொண்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையுமே தி.மு.க.விற்கு வெற்றிதேடி தரும். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நல்வாழ்விற்காக ஆட்சி செய்யும் ஒரே அரசு தி.மு.க.தான். தி.மு.க. கூட்டணிக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக அமையும். எனக்கு வாக்களித்தால் பழனி, கொடைக்கானலில் பாதாள சாக்கடை திட்டம் முதன்மை திட்டமாக நிறைவேற்றி தரப்படும். 
பழனி பகுதியில் மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகள் இயக்கப்பட்டு பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும். பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு விவரங்கள் தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

தி.மு.க. ஆட்சியில்தான் பழனி, கொடைக்கானலில் ஸ்டார் அந்தஸ்து கொண்ட பஸ்நிலையம் கட்டப்பட்டது. கொடைக்கானல் ஏரி அழகுபடுத்தப்பட்டதும் தி.மு.க. ஆட்சியில்தான். கொடைக்கானல் பகுதியில் 70 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து பட்டா இல்லாமல் தவித்த 1,100 குடும்பங்களுக்கு பட்டா வழங்கியது தி.மு.க. ஆட்சியில்தான். இவ்வாறு அவர் பேசினார்.

நேற்று முன்தினம் பழனி வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராஜஅலங்கார முருகன் படத்தை வணிகர் சங்க பேரமைப்பு பழனி நகர கவுரவ தலைவர் கந்தவிலாஸ் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். அப்போது தி.மு.க. வேட்பாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

Next Story