சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு
பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு நடைபெற்றது
கோத்தகிரி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடை வீதியில் மிகவும் பழமை வாய்ந்த பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூக்குண்டம் திருவிழா மற்றும் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல், தேரோட்டம் ஆகியவை நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடும், மதியம் 12 மணிக்கு அலங்கார வழிபாடும் நடைபெற்றது.
நாளை(சனிக்கிழமை) மதியம் 1 மணிக்கு அக்னி கம்பம் அனுப்புதல், நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு அம்மனை ரோஸ் காட்டேஜில் உள்ள ஆற்றங்கரையில் வைத்து வழி அனுப்புதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. வருகிற 5-ந் தேதி மஞ்சள் நீராடல் மற்றும் மறு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story