கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு ஒரு வயது பெண் குழந்தை பலி
கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு ஒரு வயது பெண் குழந்தை பலியானது.
கோவை
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்கத் தொடங்கி உள்ளது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் ஒரு வயது பெண் குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த குழந்தை கடந்த 24-ந் தேதி சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர்.
பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, மருத்துவக்குழுவினர் சிறப்பு கவனம் செலுத்தி குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
Related Tags :
Next Story