திருவெறும்பூர் தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் - ம.நீ.ம.வேட்பாளர் எம்.முருகானந்தம் வாக்குறுதி


திருவெறும்பூர் தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் - ம.நீ.ம.வேட்பாளர் எம்.முருகானந்தம் வாக்குறுதி
x
தினத்தந்தி 2 April 2021 4:00 PM IST (Updated: 2 April 2021 4:00 PM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் என்று ம.நீ.ம.வேட்பாளர் எம்.முருகானந்தம் வாக்குறுதி அளித்தார்.

திருச்சி,

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எம்.முருகானந்தம் அப்பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் பேசுகையில், நம் திருவெறும்பூருக்கு விடுதலை தேவை. இருண்டு கிடக்கும் திருவெறும்பூரில் சுதந்திரப் போராட்டம் 2.0 தொடங்கி விட்டது. 10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த அ.தி.மு.க.வும் சரி, 5 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்த தி.மு.க.வும் சரி திருவெறும்பூருக்கு எதுவும் செய்யவில்லை. ஆதலால் இருண்டு கிடக்கும் திருவெறும்பூர் தொகுதிக்கு வெளிச்சம் கொடுக்கும் ஒரே சின்னம் டார்ச்லைட் மட்டுமே என்றார். 
இதேபோல் மக்கள் நீதி மய்யம் இளைஞர்கள் மக்களிடம் நேரில் சென்று துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து வாக்கு சேகரித்தனர். இதில் தொகுதிக்கு நல்லதை நடத்திக் கொடுக்க எம்.முருகானந்தத்தால் மட்டுமே முடியும். நான் எம்.எல்.ஏ. ஆனவுடன் 25 செயல்திட்டங்களை செய்து கொடுப்பேன் என்று பாண்டு பத்திரத்தில் பதிவு பண்ணி கொடுக்க இந்த தொகுதியில் யாருக்கும் திராணியில்லை. தைரியம் உள்ள ஒரே நபர் எம்.முருகானந்தம் மட்டுமே. அவருக்கு ஆதரவுக் கரம் கொடுங்கள் என்றனர். இதுகுறித்து முருகானந்தத்திடம் கேட்டபோது, நல்லது செய்வதற்கு மனம் மட்டுமே வேண்டும். பணம் வேண்டாம் எனவும், என் மேல் நம்பிக்கை வைத்து களமிறங்கும் இளைஞர்களுக்கு நான் கொடுத்துள்ள வாக்குறு திப்படி நிச்சயம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவேன். உங்கள் நம்பிக்கை வீண் போகாது  என்றார்.

Next Story