பெரியகுளம் அருகே சூறைக்காற்றால் 10 ஆயிரம் வாழைகள் சேதம்
பெரியகுளம் அருகே சூறைக்காற்றால் 10 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்தது.
பெரியகுளம் :
பெரியகுளம் அருகே உள்ள சக்கரைப்பட்டி, சாவடிப்பட்டி, சொக்கத்தேவன்பட்டி, கோம்பைக்காடு, வடபுதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மரங்களில் குலை தள்ளி நன்கு விளைந்து இன்னும் சில நாட்களில் வாழைக்காய் வெட்டும் நிலை இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த பகுதியில் திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இந்த காற்றினால் அப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமாகின. இதுகுறித்து சொக்கத்தேவன்பட்டியை சேர்ந்த விவசாயி சக்தி என்பவர் கூறும்போது, சூறைக்காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்து விட்டன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story