ஏழை மக்களின் எளிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்- அமைச்சராக இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் - திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ.
ஏழை மக்களின் எளிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்- அமைச்சராக இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
திருப்பூர்,
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் எம்.எல்.ஏ.வு.மான கே.என்.விஜயகுமார் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மாலை கொங்கு மெயின் ரோடு இ.எஸ்.ஐ. அருகே உள்ள மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் தனது பிரசாரத்தை தொடங்கினார்.
பின்னர் கொங்குநகர் பகுதி 27-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வீதி, வீதியாக கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. அ.தி.மு.க. அரசின் சாதனை திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அவரது அருளாசியுடன் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை சிறந்த முறையில் வழிநடத்தி வருகிறார். பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தியும் வருகிறார். எனவே ஏழை மக்களின் எளிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். திருப்பூர் வடக்கு தொகுதியில் 4-வது குடிநீர் திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் விரைவில் நிறைவடைந்த உடன் அனைத்து பகுதிகளிலும் புதிய தார்சாலைகள் போடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story