மக்களுக்கு யார் சேவை செய்கிறார்கள் என்பதை பார்த்து வாக்களியுங்கள் - சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து, தா மா.கா தலைவர் ஜி. கே. வாசன் வாக்கு சேகரிப்பு
மக்களுக்கு யார் சேவை செய்கிறார்கள் என்பதை பார்த்து வாக்களியுங்கள் என்று சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து, தா மா.கா தலைவர் ஜி. கே. வாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி களமிறங்கி இருக்கிறார். அவர் சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் வீடு, வீடாக சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் வாக்கு கேட்க நடந்து வருவதை பார்க்கும் பொதுமக்கள் வீட்டுக்குள் அழைத்துச் சென்று குடிநீர் கொடுத்தும், காபி கொடுத்தும் உபசரித்து வாழ்த்தி அனுப்புகின்றனர், நீங்கள் இந்த தொகுதி மக்களுக்கு சொந்தக்காரர், உங்களால் பலனடைந்தவர்கள் ஏராளம். கல்வி, வேலைவாய்ப்பில் ஜாதி மதம் பார்க்காமல் எல்லோருக்கும் உதவி செய்யும் குணம் படைத்த உங்களை
வெற்றிபெற செய்வது எங்கள் கடமை என்று கூறி வருகின்றனர்.
கிண்டி,கன்னிகாபுரம், உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று சைதை துரைசாமி இரட்டை இலை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அ.தி.மு.க. தொண்டர் ஒருவரின் குழந்தைக்கு "வெற்றிச்செல்வன்" என்று பெயரிட்டு மகிழ்ந்தார். இதேபோன்று சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட வேளச்சேரி பகுதியிலும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார், அப்போது வேளச்சேரி காந்தி தெருவில் உள்ள துணி சலவை செய்யும் கடைக்குச் சென்ற அவர் துணிக்கு இஸ்திரி செய்து தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார். மேலும் அவருடன் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஏராளமானோர் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து, தா மா.கா தலைவர் ஜி. கே. வாசன் ஜாபார் கான் பேட்டையில் பிரசாரம் செய்தார். சைதை துரைசாமி என்று சொன்னாலே தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டு அன்பு பாராட்டு பெற்றவர் .சென்னை மாநகராட்சியில் மக்கள் மேயராக சிறப்பாக பணியாற்றியவர், மனிதநேய மையத்தை நடத்தி வரும் மனிதநேய நேயர். சாதி மதம் இனத்துக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் ,அனைத்து துறைகளிலும் வளர வேண்டுமென்றால் செய்து சைதை துரைசாமிக்கு வாக்களிக்க வேண்டும்.
சைதை துரைசாமியின் அணுகுமுறை, பண்பு, அறிவார்ந்த விஷயங்களை நன்கு அறிந்து, சென்னை மாநகராட்சியின் முதல் "அ.தி.மு.க மேயர்" என்ற பொறுப்பை ஜெயலிதா இவருக்கு கொடுத்தார். இந்தியாவிலேயே தமிழகத்தில் பெண்களுக்கு அதிக திட்டங்கள் நிறைவேற்றப் படுகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா சோலார் அடுப்பு, அனைவருக்கும் வீடு – “அம்மா இல்ல திட்டம்”, குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதம் ரூபாய்1500, அனைவருக்கும் இலவச அரசு கேபிள் டிவி இணைப்பு, இல்லத்தரசிகளுக்கு விலையில்லா 6 சிலிண்டர் , பொங்கலுக்கு ரூபாய் 2500 பொங்கல் பரிசு, நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய மகளிருக்கு 50 சதவீத கட்டண சலுகை, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1500 உழவு மானியம், போன்ற பல நல்லத்திட்டங்கள் அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் வழங்க பட இருக்கிறது என்றும், சைதை துரைசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்று அவர் பேசினார்.
Related Tags :
Next Story