வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்துக்களின் நலன் காப்போரை ஆதரிக்க வேண்டும் - அகில பாரத துறவியர் பேரவை
வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்துக்களின் நலன் காப்போரை ஆதரிக்க வேண்டும் என்று அகில பாரத துறவியர் பேரவையினர் கூறினார்கள்.
கோவை,
அகில பாரத துறவியர் பேரவை பொறுப்பாளர்கள் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், பாபுஜி சுவாமிகள் ஆகியோர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தலில் நாட்டின் குடிமக்கள் அனைவரும் தவறாமல் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். 100 சதவீத வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இந்து சமய நம்பிக்கையையும், கலாசாரத்தையும், வழிபாட்டு முறையையும், கோவில்களையும், இந்து கடவுள்களையும், இந்து பெண்களையும், தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்தும் நாத்திகவாதிகளும், இந்து விரோத சக்திகளும் சில அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்துக்கொண்டு இழிவுபடுத்தி பேசி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது போல் இந்து விரோதிகளுக்கு இந்துக்கள் ஒருங்கிணைந்து வருகிற சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். இந்து கோவில் களையும், இந்து கலாசாரத்தின் பண்பாட்டையும் பாதுகாக்கின்ற, ஆன்மிகத்தின் மீது பற்று கொண்டு இந்துக்களின் நலன் காக்கும் அரசியல் கட்சிக்கு வாக்களித்து ஆதரவு அளிக்க வேண்டும்.
சாதி மறுப்பு திருமணத்துக்கு நிதி அளிக்கப்படும் என்று கூறியிருப்பது சாதி மோதல்களுக்கு வழிவகுக்கும். அதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story