போலீசார், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்


போலீசார், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
x
தினத்தந்தி 2 April 2021 10:34 PM IST (Updated: 2 April 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் போலீசார், துணை ராணுவத்தினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

சிங்கம்புணரி,

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சிங்கம்புணரியில் போலீசார், துணை ராணுவத்தினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பொன் ரகு தலைமை தாங்கினார். காவல் எல்லை பாதுகாப்பு படை, கமாண்டோ படை வீரர்களுடன் சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் முன்னிலையில் சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூர் பகுதிகளை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் சிங்கம்புணரி கிருங்காக்கோட்டை விலக்கில் இருந்து திண்டுக்கல், காரைக்குடி சாலை வழியாக பெரிய கடைவீதி சென்று அங்கிருந்து மீண்டும் சிங்கம்புணரி பஸ் நிலையத்தை வந்தடைந்தது.

Next Story