துப்பாக்கியில் இருந்து தோட்டா பாய்ந்து பஸ் கண்ணாடி சேதம்


துப்பாக்கியில் இருந்து தோட்டா பாய்ந்து பஸ் கண்ணாடி சேதம்
x
தினத்தந்தி 2 April 2021 10:47 PM IST (Updated: 2 April 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் பாதுகாப்பு பணிக்கு வந்த துணை ராணுவ அதிகாரியின் துப்பாக்கியில் இருந்து தோட்டா பாய்ந்து பஸ் கண்ணாடி சேதம் அடைந்தது.

சிவகங்கை,

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை ஒட்டி பாதுகாப்பு பணிக்காக சிவகங்கை மாவட்டத்திற்கு துணை ராணுவ படையைச் சேர்ந்த 580 பேர் வந்துள்ளனர். இவர்களில் பலர் சிவகங்கையில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இங்கு தங்கியிருந்த துணை ராணுவத்தினரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஸ்வரப்சிங் என்பவர் பாதுகாப்பு பணி முடிந்து இரவில் சிவகங்கையில் இருந்து மினி பஸ்சில் ஆயுதப்படை குடியிருப்புக்கு வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அவரிடமிருந்த கைத்துப்பாக்கியில் இருந்து தோட்டா பாய்ந்தது. இதில் பஸ் கண்ணாடி சேதமடைந்தது. இதுதொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story