வால்பாறையில் நகராட்சி தங்கும் விடுதிக்கு சீல்


சீல்
x
சீல்
தினத்தந்தி 2 April 2021 11:02 PM IST (Updated: 2 April 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் நகராட்சி தங்கும் விடுதிக்கு சீல்.

வால்பாறை,

வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நேரத்தில் புதிய பணிகள் தொடங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வால்பாறை சட்டமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆறுமுகம் கோவை மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான நாகராஜனிடம்  புகார் அளித்தார். 


கலெக்டர் உத்தரவின் பேரில் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் சரவணகுமார் மற்றும் பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் ஆகியோர் நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான தங்கும் விடுதிக்கு சீல் வைத்தனர்.  

பின்னர் நகராட்சி மேலாளரிடம் தேர்தல் முடியும் வரை எந்தவிதமான புதிய பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என்று நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் சரவணகுமார் உத்தரவிட்டார்.

Next Story