கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.10 லட்சம் பறிமுதல்
விக்கிரவாண்டி அருகே கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.10 லட்சத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பறக்கும்படை நிலைகண்காணிப்பு குழு அலுவலர் கோதண்டபாணி தலைமையில் ஏட்டுகள் பார்த்தசாரதி, நீலமேகம், வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை வி.சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.10 லட்சம் இருந்தது. ஆனால் அந்த பணத்திற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை. இது தொடர்பாக காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பாலசுப்பிரமணியன்(வயது 46) என்பதும், தொழில் சம்பந்தமாக பணத்தை விருத்தாசலத்திற்கு எடுத்துச்செல்வதும் தெரியவந்தது.
பணம் பறிமுதல்
இது பற்றி வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி துணை ஆணையர் கமலாதேவி தலைமையில் பாலதண்டாயுதம், மணிஷ் ஆகியோர் விரைந்து வந்து பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் செஞ்சி அருகே நகனூரை சேர்ந்த குமார் என்பவர் உரிய ஆவணமின்றி ரூ.77 ஆயிரத்து 500-ஐ மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்தார். அந்த பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story