வாக்குப்பதிவு செய்ய மறக்காம வந்துடுங்க...!


வாக்குப்பதிவு செய்ய மறக்காம வந்துடுங்க...!
x
தினத்தந்தி 2 April 2021 11:33 PM IST (Updated: 2 April 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

செல்லக்குழந்தை பெயரில் அழைப்பிதழ் கொடுத்து வாக்குப்பதிவு செய்ய மறக்காம வந்துடுங்க என்று அதிகாரிகள் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

விழுப்புரம், 

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நூதன துண்டு பிரசுரங்களை அச்சடித்து அதனை பொதுமக்களுக்கு வழங்கி தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்களிடம் விழிப்புணர்வு

அதில், 16-வது சட்டமன்ற தேர்தல் விழா அழைப்பிதழ் என்ற தலைப்பில் வணக்கம், நான்தான் உங்க செல்லக்குழந்தை, எனக்கு 16-வது சட்டமன்ற தேர்தல் விழா செய்யப்போறாங்க. அது எப்போனா 6-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை. இடம் எங்க இருக்குனா வாக்குச்சாவடி மையங்களில்.... அப்படினு தேர்தல் அதிகாரி சொன்னாங்க.... அன்றைய தினம் எல்லாரும் உங்கள் பொற்கரங்களால் என்னை அழுத்தி ஆசிர்வதித்து விட்டு செல்லும்படி மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த விழாவுக்கு அவசியம் வாங்க.... உங்களை எதிர்பார்த்து இருப்பேன்.... மறக்காம வந்துடுங்க... என்று அச்சிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நூதன முறையில் வாசகங்கள் இடம்பெற்றுள்ள துண்டு பிரசுரங்களை மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், பொதுமக்களிடம் வழங்கி தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Next Story