அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க கோரிக்கை


அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 2 April 2021 11:35 PM IST (Updated: 2 April 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளது.

சிவகங்கை,

தேர்தல் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க ேவண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளது.

கோரிக்கை மனு

தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ரா.வாசுகி மற்றும் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர், ஐ.சி.டி.எஸ். மாவட்ட திட்ட அலுவலர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஊட்டசத்து திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் துறை சார்ந்த பணிச்சுமையோடு கூடுதலாக தேர்தல் பணியில் வாக்குசாவடி நிலை அலுவலர் பணியையும் நிர்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டு முழுவதும் செய்து வருகின்றனர். இதற்கான ஊதியம் குறைந்தபட்சமாக 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதில்லை. மாறாக ஆண்டுக்கு ஒருமுறை ரூ.7 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது.அதுவும் முழுமையாக வழங்கப்படுவதில்லை. வாக்குபதிவு நடைபெறும் நாளிலும் வாக்காளர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொள்ளும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, அன்றைய தினத்தில் பணியை மேற்கொள்ளும் அரசு  ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற சிறப்பு ஊதியமும், வழங்கப்படுவதில்லை. இருக்கை வசதியும் அளிப்பதில்லை.

சிறப்பு ஊதியம்

இதன் காரணமாக இனிவரும் காலங்களில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வாக்குசாவடி நிலை அலுவலர் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வாக்குபதிவு நாளில் மற்றவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும், இருக்கை வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தல் ஆணையர், சமூகநல இயக்குனர், ஐ.சி.டி.எஸ். திட்ட இயக்குனர் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

Next Story