மின்னணு எந்திரங்கள் வைக்க வரிசை எண் எழுதும் பணி


மின்னணு எந்திரங்கள் வைக்க வரிசை எண் எழுதும் பணி
x
தினத்தந்தி 2 April 2021 11:43 PM IST (Updated: 2 April 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு எந்திரங்கள் வைக்க வரிசை எண் எழுதும் பணிகள் நடைபெற்று வருகிறது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் (தனி), வானூர் (தனி), செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது.
இதில் விழுப்புரம் தொகுதிக்கு விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியும், செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கு செஞ்சி டேனி கல்வியியல் கல்லூரியும், திண்டிவனம், மயிலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரியும், வானூர் தொகுதிக்கு அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், விக்கிரவாண்டி தொகுதிக்கு விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியும், திருக்கோவிலூர் தொகுதிக்கு திருக்கோவிலூர் வள்ளியம்மை மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் வாக்கு எண்ணும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வரிசை எண் எழுதும் பணி

இந்த வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து வாக்கு எண்ணுவதற்கு ஏற்ப மையங்களை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
தேர்தலில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு வந்து வைப்பதற்கு ஏற்றாற்போல் வாக்கு எண்ணும் மையங்களின் ஒவ்வொரு அறையிலும் வரிசை எண்கள் எழுதப்பட்டு வருகிறது. மேலும் வாக்கு எண்ணும் பணிக்காக 7 சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி மையமும், அந்தந்த மையங்களில் வேட்பாளர்கள், முகவர்கள் அமருவதற்கான வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

Next Story