அதிகாரியின் வீட்டில் திருட முயற்சி
அதிகாரியின் வீட்டில் திருட முயற்சி நடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் முகவை ஊருணி மேல்கரை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது59). சென்னை தலைமை செயலகத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீரமைப்பு துறையில் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வருகிறார். பணி காரணமாக குடும்பத்துடன் சென்னையில் மகேஸ்வரன் வசித்து வரும் நிலையில் இங்குள்ள வீட்டில் முதுனாள் கிராமத்தை சேர்ந்த தர்மர் என்பவர் காவலாளியாக இருந்து வந்துள்ளார். கடந்த 31-ந் தேதி இரவு காவல் பணி முடிந்து வீட்டிற்கு சென்ற காவலாளி மீண்டும் மாலை பணிக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு உள்புறம் உள்ள கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மகேஸ்வரன் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. பொருட்கள் எதுவும் திருடுபோகவில்லை என்பது தெரிந்தது. யாரோ மர்ம நபர்கள் திருடும் நோக்கி உள்ளே வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி மகேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story