வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி


வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 2 April 2021 11:52 PM IST (Updated: 2 April 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை சட்டசபை தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது.

சிவகங்கை,

வருகின்ற சட்டசபை தேர்தலில் சிவகங்கை சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் குணசேகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அன்பரசன், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஜோசப் உள்பட 15 பேர் போட்டியிடுகின்றனர்.
இதை தொடர்ந்து போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி தேர்தல் அலுவலர் முத்துகழுவன் முன்னிலையில் நடந்தது.இந்தப்பணியை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டார்.

Next Story