துணை ராணுவத்தினர் அணிவகுப்பு
பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்.
பனைக்குளம்,
பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்.
தடை
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் அலுவலர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்கொண்டு வருகிறார்.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆலோசனையின்படி, துணை ராணுவ அணிவகுப்பு பாரதிநகர் பஸ் நிறுத்தம் அருகே கேணிக்கரை போலீசார் தலைமையில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு நடத்தினர்.
அணிவகுப்பு
பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட முக்கிய வீதிகளில் துணை ராணுவத்தினர் நடத்திய இந்த அணிவகுப்பை பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
Related Tags :
Next Story