பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் விழா


பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் விழா
x
தினத்தந்தி 2 April 2021 6:30 PM GMT (Updated: 2 April 2021 6:30 PM GMT)

கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது.

சிங்கம்புணரி,

 சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டியில் பிரசித்தி பெற்ற பட்டத்தரசி அம்மன் கோவிலில் கடந்த 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் பங்குனி திருவிழா தொடங்கியது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 9 மணிக்கு கோவில் மந்தை கூடம் முன்பு இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனர்.
நோய் நொடியின்றி குழந்தைகளை பாதுகாக்க கரும்பு தொட்டில் நேர்த்திக்கடனும் பக்தர்கள் செலுத்தினர். விழாவையொட்டி தீச்சட்டி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

Next Story