பெருமாள் கோவிலில் கருட சேவை


பெருமாள் கோவிலில் கருட சேவை
x
தினத்தந்தி 3 April 2021 12:49 AM IST (Updated: 3 April 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி திருவிழாவில் கருட சேவை நடந்தது.

தென்திருப்பேரை, ஏப்:
தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி திருவிழாவில் கருட சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

பங்குனி திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில் நவ திருப்பதிகளில் ஏழாவது கோவிலாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தன்று கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
திருவிழா நாட்களில் காலை, மாலையில் பெருமாள் நிகரில் முகில்வண்ணன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் காட்சி நடைபெறும். ஏப்ரல் 1-ந் தேதியான நேற்று முன்தினம் இரவு கருட சேவை நடந்தது. அன்ன வாகனத்தில் தாயாரும் கருடவாகனத்தில் உற்சவர் நிகரில் முகில்வண்ணன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். பின்னர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தனர்.

திரளான பக்தர்கள் தரிசனம்

5-ந் தேதி தேரோட்டம் நடைபெறும். கடந்த ஆண்டு நோய்த்தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. எனவே இந்த ஆண்டு பல கட்டுப்பாடுகளுடன் முகக்கவசம், கையுறை அணிந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 
விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் பொன்னி, செயல் அலுவலர் இசக்கியப்பன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story