தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
சிவகாசி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்ெகாலை செய்து கொண்டார்.
சிவகாசி,
சிவகாசி தட்டாவூரணியை சேர்ந்தவர் சிவராமன் மகன் கருப்பசாமி (வயது 31). இவருக்கும் கிருஷ்ணவேணி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் கிருஷ்ணவேணி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதைத்தொடர்ந்து லட்சுமி என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கருப்பசாமி 2-வது திருமணம் செய்துகொண்டார். மதுப்பழக்கம் உள்ள கருப்பசாமி தனது மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் கருப்பசாமி வீட்டில் யாரும் இல்லாதபோது மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story