மாவட்ட செய்திகள்

வட்டார அளவில் மருத்துவ குழு அமைப்பு + "||" + Medical team system

வட்டார அளவில் மருத்துவ குழு அமைப்பு

வட்டார அளவில் மருத்துவ குழு அமைப்பு
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வட்டார அளவில் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வட்டார அளவில் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

முதியோர்களை தவிர்க்க வேண்டும்

சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக பொது சுகாதாரத்துறையின் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வெளியிடங்களில் கடைகள், சந்தை, மார்க்கெட் போன்ற அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்லும்பொழுது கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்லவேண்டும். இது போன்ற பொது இடங்களுக்கு குழந்தைகள் மற்றும் முதியோர்களை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

குழு அமைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வட்டார அளவில் மருத்துவ அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரசின் நிலையான வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.
நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தினசரி சுமார் 20 தடவை வரை சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் மேலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். யாருக்கேனும் காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.