பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 வாலிபர்கள் சாவு


பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 வாலிபர்கள் சாவு
x
தினத்தந்தி 7 April 2021 8:41 PM GMT (Updated: 7 April 2021 8:41 PM GMT)

பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

பண்ருட்டி, 

கடலூா் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை ரெட்டியார் தெருவை சேர்ந்தவர்  ராசு. இவரது மகன் சபரி(வயது 26). தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர் ஆவார். அதே பகுதியில் வசிப்பவர் சரவணன் மகன் கணேசன்(26). இருவரும் நண்பர்கள்.

 நேற்று இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில், சொந்த வேலையாக கடலூருக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

கார் மோதியது

அப்போது, மோட்டார் சைக்கிளை சபரி ஓட்டி வந்தார். ராஜபாளையம் பள்ளிக்கூடம் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே கடலூர் நோக்கி வந்த கார், எதிர்பாராதவிதமாக  மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
 இதில்  சபரி, கணேசன்  ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். 

படம் விளக்கம்:- சபரி 
----------


போலீஸ் விசாரணை

இதுகபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சபரி, கணேசன் ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story