தைல மர காட்டில் தீ விபத்து


தைல மர காட்டில் தீ விபத்து
x
தினத்தந்தி 9 April 2021 12:18 AM IST (Updated: 9 April 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

தைல மரக்காட்டில் தீ பிடித்தது.

அரிமளம்
அரிமளம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் தைல மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.  அரிமளம் அருகே ஆனைவாரி கிராம பகுதியில் உள்ள தைல மர காட்டில் திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்ததால் அரிமளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இளைஞர்களுடன் சேர்ந்து போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் ஏராளமான தைல மரங்கள் தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story