தேர்தல் ஆணைய உத்தரவால் மூடப்பட்ட தலைவர்கள் சிலைகள் திறக்கப்படுமா?


தேர்தல் ஆணைய உத்தரவால் மூடப்பட்ட தலைவர்கள் சிலைகள் திறக்கப்படுமா?
x
தினத்தந்தி 9 April 2021 12:29 AM IST (Updated: 9 April 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் ஆணைய உத்தரவால் மூடப்பட்ட தலைவர்கள் சிலைகள் திறக்கப்படுமா? என்று அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நெல்லை, ஏப்:
தேர்தல் ஆணைய உத்தரவால் மூடப்பட்ட தலைவர்கள் சிலைகள் திறக்கப்படுமா? என்று அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ந்தேதி நடைபெற்று முடிவடைந்தது. வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குகள் அனைத்தும் வருகிற மே மாதம் 2-ந்தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மற்றும் கட்சி கொடிக்கம்பங்கள், கட்சி விளம்பரங்கள் அனைத்தையும் மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

தலைவர்கள் சிலைகள் மறைப்பு

அதன்படி நெல்லையில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., இந்திரா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் சிலைகளை மாநகராட்சி ஊழியர்கள் அட்டை, காகிதங்கள் கொண்டு மூடி மறைத்தனர்.
இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்து விட்டதால் தலைவர்கள் சிலைகள் மீண்டும் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

கோரிக்கை

அதாவது தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கவும், பரிசுப்பொருட்கள் வினியோகத்தை தடுக்கவும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டதால் பறக்கும் படைகள் சோதனை நிறுத்தப்பட்டு விட்டது. 
அதேபோல் தேர்தல் முடிவடைந்து விட்டதால் மூடப்பட்ட தலைவர்களின் சிலைகள் மற்றும் அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story