புதிதாக 131 பேருக்கு கொரோனா தொற்று ஒருவர் உயிரிழந்தார்


புதிதாக 131 பேருக்கு கொரோனா தொற்று ஒருவர் உயிரிழந்தார்
x
தினத்தந்தி 9 April 2021 12:47 AM IST (Updated: 9 April 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக 131 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 568 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 32 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 58 வயது ஆண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது.

Next Story