ஆயுதப்படை போலீசார் 3 பேருக்கு கொரோனா


ஆயுதப்படை போலீசார் 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 April 2021 12:47 AM IST (Updated: 9 April 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

ஆயுதப்படை போலீசார் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி,

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன. முன்களப்பணியாளர்கள் மட்டும் முககவசம் அணிந்தபடி பணியாற்றி வந்தனர். காவல் துறையை சேர்ந்த ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர். பின்னர் படிப்படியாக கொரோனா வைரசின் தாக்கம் குறைந்து இயல்பு நிலை திரும்பியது. இந்தநிலையில் தற்போது மீண்டும் கொரோனா 2-வது அலை உருவாகி வருகிறது. 

இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி ஆயுதப்படையை சேர்ந்த 3 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Next Story