மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி + "||" + Worker killed in car crash on motorcycle

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி
ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஜெயங்கொண்டம்:

வேலைக்கு சென்றனர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் ஜெய்சங்கர்(வயது 50). தொழிலாளியான இவரும், புதுச்சாவடி கிராமத்தை சேர்ந்த முருகேசனின் மகன் கார்த்திக் (24), ரங்கசாமி மகன் ஆறுமுகம் (45) ஆகியோரும் கூலி வேலைக்கு செல்வதற்காக குருவாலப்பர் கோவில் கிராமத்திற்கு நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
திருச்சி- சிதம்பரம் சாலையில் உள்ள பொன்னேரி அருகே வந்தபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.
சாவு
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் அங்கு சென்று, 3 பேரையும் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ஜெய்சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
2. கரூரில் மது என நினைத்து விஷத்தை குடித்த கொத்தனார் சாவு
கரூரில் மது என நினைத்து விஷத்தை குடித்த கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
3. விஷம் குடித்து விவசாயி தற்கொலை
சாத்தூரில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
4. அழுகிய நிலையில் மூதாட்டி பிணம்
உடல் அழுகிய நிலையில் மூதாட்டி பிணமாக கிடந்தார்.
5. ரெயிலில் அடிபட்டு பெண் சாவு
அரியலூர் அருகே ரெயிலில் அடிபட்டு பெண் இறந்தார்.