தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டை தாக்கிய 4 பேர் மீது வழக்கு; 2 பேர் கைது


தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டை தாக்கிய 4 பேர் மீது வழக்கு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 April 2021 12:55 AM IST (Updated: 9 April 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல். இவர் தளவாய் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 6-ந் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவையொட்டி உத்திரக்குடி வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜாராமன், பழனிச்சாமி, சித்திரவேல், பாஸ்கர் ஆகிய 4 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு முன்பு இடையூறு அளிக்கும் வகையில் வாகனத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. அதை பார்த்த ஏட்டு கதிர்வேல், வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கதிர்வேலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 பேரும், அவரை பணி செய்ய விடாமல் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் கதிர்வேல் அளித்த புகாரின் பேரில், 4 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமி(வயது 42), சித்திரவேல் (32) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான ராஜாராமன், பாஸ்கர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Next Story