வளநாடு அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
வளநாடு அருகே ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
துவரங்குறிச்சி,
வளநாடு அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 61). இவர் தனது தோட்டத்து வீட்டில் சுமார் 40 ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஆடுகள் கத்தும் சத்தம் கேட்கவே, அவர் வெளியில் வந்தார். அப்போது 2 பேர் ஆடுகளை திருடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆடு திருடிய 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து வளநாடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், டி இடையப்பட்டியை சேர்ந்த மோகன் (22), வெள்ளியங்குடிபட்டியை சேர்ந்த கனகராஜ் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஆட்டை மீட்டதுடன், ஆடு திருட பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story