தண்டவாளத்தை கடந்தபோது ெரயில் என்ஜினில் அடிபட்டு டிரைவர் பலி


தண்டவாளத்தை கடந்தபோது ெரயில் என்ஜினில் அடிபட்டு டிரைவர் பலி
x
தினத்தந்தி 9 April 2021 1:16 AM IST (Updated: 9 April 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அருகே தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் என்ஜினில் அடிபட்டு டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

பாபநாசம்:
பாபநாசம் அருகே தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் என்ஜினில் அடிபட்டு டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
டிரைவர்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சி நெடுந்தெரு கிராமம் வெள்ளாளர் தெருவில் வசித்து வருபவர் முருகேசன். இவரது மகன் அரவிந்தன்(வயது 23). இவர், கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் அய்யம்பேட்டை-பண்டாரவாடை இடையே சரபோஜிராஜபுரம்  ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
ரெயில் என்ஜினில் அடிபட்டு பலி
அப்போது திருச்சியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரயில் என்ஜினில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது தந்தை முருகேசன் தஞ்சை ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேலன், ஏட்டு சுரேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அரவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story