வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு


வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 9 April 2021 1:43 AM IST (Updated: 9 April 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் டி.ஐ.ஜி.முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல்: 

வாக்கு எண்ணும் மையம் 
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. 

அங்கு 7 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக அவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு, தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

மேலும் அந்த அறைகள் சீல் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 

அதேபோல் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 

அதோடு வாக்கு எண்ணும் மையம் முழுவதும் 154 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. 

அதற்கு வசதியாக ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருக்கிறது.

டி.ஐ.ஜி. ஆய்வு 
இதற்கிடையே வாக்கு எண்ணும் மையத்துக்கு வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். 

அவ்வாறு வருபவர்களின் விவரத்தை போலீசார் சேகரிக்கின்றனர். அதேபோல் வாக்கு எண்ணும் மையத்தின் அனைத்து பகுதியிலும் தினமும் வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் 24 மணி நேரமும் போலீசார் விழிப்பாக இருக்க வேண்டும். கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை கவனமாக பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். 

ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.

Next Story