மாவட்ட செய்திகள்

மனைவியை சித்ரவதை செய்த ஆயுதப்படை போலீஸ்காரர் + "||" + Case

மனைவியை சித்ரவதை செய்த ஆயுதப்படை போலீஸ்காரர்

மனைவியை சித்ரவதை செய்த ஆயுதப்படை போலீஸ்காரர்
கூடுதலாக 50 பவுன் நகை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 5 பேர் மீது கோர்ட்டு உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருமங்கலம்,

கூடுதலாக 50 பவுன் நகை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 5 பேர் மீது கோர்ட்டு உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சித்ரவதை

திருமங்கலம் அருகே உள்ள ஆலங்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகள் ராஜலட்சுமி (வயது 19). இவருக்கும் தெற்குத் தெருவை சேர்ந்த பழனிச்சாமி மகன் குருசாமி (30) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடைபெற்றது. குருசாமி மதுரை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். 
திருமணத்தின் போது 25 பவுன் நகையும், ரூ.3 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அதே ஆண்டு அக்டோபர் மாதம் ராஜலட்சுமியின் தந்தை குருசாமி இறந்துவிட்டார். அதன்பிறகு போலீஸ்காரர் குருசாமி அவரது தந்தை பழனிசாமி, தாயார் மணிமேகலை மற்றும் சகோதரர்களான சரவணன், மாரிமுத்து ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜலட்சுமியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

5 பேர் மீது வழக்கு

மேலும் கூடுதலாக வரதட்சணை கேட்டு 30 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் வாங்கி வருமாறு அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து திருமங்கலம் கோர்ட்டில் ராஜலட்சுமி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 
இதுதொடர்பாக போலீசார் விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இது குறித்து போலீஸ்காரர் குருசாமி, பழனிசாமி, மணிமேகலை, சரவணன், மாரிமுத்து ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சரவணன் மற்றும் மாரிமுத்து மதுரை அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் ேபாலீஸ்காரர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேர் மீது வழக்கு
மதுரை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
2. பெரம்பலூர் அருகே தாய்-மகன் உள்பட 4 பேர் மீது தாக்குதல்
பெரம்பலூர் அருகே தாய்-மகன் உள்பட 4 பேர் தாக்கப்பட்டது தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. முன்னாள் அமைச்சர் குறித்து அவதூறு தி.மு.க. நிர்வாகி மீது போலீசார் வழக்கு
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான பி.வி.ரமணா போட்டியிடுகிறார்.
5. அ.தி.மு.க.-தி.மு.க.வினர் மோதல்; 26 பேர் மீது வழக்கு
திருப்புவனம் அருகே அ.தி.மு.க.-தி.மு.க.வினர் நேருக்கு நேர் மோதி கொண்டனர். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.