கடைகளில் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்கா விட்டால் அபராதம்
கடைகளில் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்கா விட்டால் அபராதம் விதிக்கப்படும்.
கோவை,
கோவையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். இல்லா விட்டால் அபராதம் விதிக்கப்படும். காய்கறி கடைகள், சலூன்கள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் கட்டாயம் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
கடைகள், வணிக வளாகங்களில் "பல்ஸ் ஆக்சி மீட்டர்", தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவை வைத்து வாடிக்கையாளர்கள் வரும்போது பரிசோதனை செய்த பிறகே கடைக்குள் அனுமதிக்க வேண்டும். கடைகளில் கூட்டம் சேர அனுமதிக்கக்கூடாது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவருடன் வருபவர் களை பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் போன்றவைக்கு முதலில் அபராதம் விதிக்கப்படும்.
தொடர்ந்து அலட்சியம் காட்டினால் கடைகளை பூட்டி சீல் வைக்கப்படும்.
பொது மக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பஸ்சிலும் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். திருமணம், விசேஷங்களில் ஏற்கனவே உள்ள விதிமுறைகள் படி 50 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
இனி வரும் நாட்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை கட்டுப்ப டுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வயதானவர்கள், நோயாளிகள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது. வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும். இந்த நோய் வீட்டில் உள்ளவர்களுக்கு பரவல் இருக்க வெளியூர் செல்பவர்கள் தங்களை தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story