மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி + "||" + one death in kavery

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலியானார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சிக்குமாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 21). டிப்ளமோ பட்டதாரியான இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 
 இந்த நிலையில் தனது பாட்டியின் ஈம காரியத்திற்காக ஒகேனக்கல்லுக்கு உறவினருடன் பஸ்சில் வந்தார். பின்னர் சாரணர் கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது சிவகுமார் திடீரெனஆற்றில் மூழ்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஒகேனக்கல் போலீசுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் போலீசார், ரஞ்சித் குமாரை தேடினர்.

இந்த நிலையில் அதே இடத்தில் ரஞ்சித் குமார் உடலை மீட்டனர். அவரது உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ரஞ்சித் குமாரின் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.