மாவட்ட செய்திகள்

வேன்-ஆட்டோ மோதல்; டிரைவர் சாவு + "||" + Death

வேன்-ஆட்டோ மோதல்; டிரைவர் சாவு

வேன்-ஆட்டோ மோதல்; டிரைவர் சாவு
திருமங்கலம் அருகே வேன்- ஆட்டோ மோதலில் ஆட்ேடா டிரைவர் பலியானார்.
திருமங்கலம்,

திருமங்கலம் அருகே உள்ள தனக்கன்குளத்தை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 34). இவர் சொந்தமாக ஷேர் ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் திருமங்கலம் ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து கப்பலூர் சென்றார். பின்னர் அங்கிருந்து ஆட்டோவில் திருமங்கலம் திரும்பி கொண்டிருந்தார். காந்திசிலை அருகே வந்த போது எதிரே வந்த வேன், ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தங்கப்பாண்டி சிகிச்சைக்காக  மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் இறந்தார். இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கார் மோதி விவசாயி சாவு
சோழவந்தான் அருகே கார் மோதியதில் விவசாயி இறந்தார்.
2. மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி
ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
3. டெய்லர் சாவு
டெய்லர் திடிரென பரிதாபமாக இறந்தார்.
4. கொரோனாவுக்கு ஒருவர் பலி
விருதுநகரில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.
5. விஷம் தின்ற முதியவர் சாவு
விஷம் தின்ற முதியவர் பரிதாபமாக இறந்தார்.